K U M U D A M   N E W S

‘ப’ வடிவில் இருக்கைகள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? அன்புமணி விமர்சனம்

‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

சட்டவிரோத சூதாட்ட செயலி: 29 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு..!

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கணவருடன் சண்டை.. வீட்டிலிருந்து வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அருணா வீட்டில் ரெய்டு.. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சோதனை!

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' மற்றும் 'இதயத்தை திருடாதே' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை அருணா தொடர்பான அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாவின் கணவரும், தொழிலதிபருமான மோகன் குப்தாவின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

அரசு பள்ளியில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்.. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

Government school, drunk, teacher who fainted, education department officials, அரசு பள்ளி, மதுபோதை, மயங்கிவிழுந்த ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள்

ஜப்பானிய கடலோர காவல்படை கப்பல் சென்னை வருகை: கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் இந்தியா!

இந்திய கடலோர காவல்படைக்கும் (ICG) ஜப்பான் கடலோர காவல்படைக்கும் (JCG) இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘JCGS Itsukushima’ என்ற கப்பல் நேற்று (ஜூலை 7) சென்னை துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது ‘உலக கடல் பயணம் பயிற்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உணவில் அதிக உப்பு.. கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி தவறி விழுந்து உயிரிழப்பு!

உணவில்அதிக உப்பு சேர்த்ததாக மனைவியை கடுமையாக தாக்கிய கணவரால் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 21 முதல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.