ஐடி ஊழியரின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியை...ஷாக்கான பெண் வீட்டார்
பெண் ஆசிரியை அழைத்து வந்த வழக்கறிஞர்களை பார்த்து பெண் வீட்டார்கள் உங்களை எங்கள் குலதெய்வம் தான் அனுப்பி வைத்து என் மகள் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது என கண்ணீர் மல்க பேசினர்
பெண் ஆசிரியை அழைத்து வந்த வழக்கறிஞர்களை பார்த்து பெண் வீட்டார்கள் உங்களை எங்கள் குலதெய்வம் தான் அனுப்பி வைத்து என் மகள் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது என கண்ணீர் மல்க பேசினர்
தீ விபத்தால் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிய தவெக பெண் நிர்வாகியை ஷூவால் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுபோல எதுவும் நடக்கவில்லை என போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்று நடைப்பெற்ற UPSC முதல்நிலை தேர்வில் பெரியார் தொடர்பான கேள்வியொன்று சர்சைக்குள்ளான நிலையில், செஸ் விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்த டி.குகேஷ் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் பாக்கில் உள்ள 'பாக்' என்ற வார்த்தை பாகிஸ்தானை குறிப்பதால், ஆப்ரேஷன் சிந்தூர்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.
திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.