K U M U D A M   N E W S
Promotional Banner

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி: ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. Walmart, Amazon போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேசன் பொருட்கள் வாங்குபவர்களின் கவனத்திற்கு..அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளின் மூலம் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றினை கூறியுள்ளார் அமைச்சர்.

கோவையில் போலீஸ் கஞ்சா வேட்டை.. சிக்கிய கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.

”திமுக ஆட்சியில் கனஜோராக கஞ்சா விற்பனை..” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கு போதைப்பொருள், செல்போன் சப்ளை... வக்கீல்களுக்கு டிஜிபி கட்டுப்பாடு

சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

500 மீட்டர் கூட ஓட முடியவில்லை.. போதைப்பொருள் புழக்கமே காரணம் - ஆளுநர் ரவி

போதைப்பொருள் புழக்கத்தால் பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள்... இளைஞர்களை சீரழித்தது திமுக தான்... அன்புமணி ராமதாஸ் அட்டாக்!

PM Anbumani Ramadoss Condemns TN Govt : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

70 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்... கைதானவர்கள் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?

Drug Smugglers Lin With International Drugs Trafficking Gangs : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Drugs Seized in Chennai : சென்னையில் 70 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்... போலீஸாரை அதிர வைத்த கும்பல்!

Drugs Seized in Chennai Kilambakkam Bus Stand : சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.