K U M U D A M   N E W S
Promotional Banner

அதிருப்தியில் அதிமுக மாஜிக்கள் .. மறைக்கப்படும் உண்மைகள் உறுதியாகிறதா OPS ENTRY? - RB Udhayakumar

அதிமுகவின் உட்கட்சி பிரச்னை குறித்து விரிவாக பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

”எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்" - ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில்

இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

"எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" - ஆளுநர் ரவி

தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை.. தமிழ்ச் சமூகம் கொதித்தளிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி திணிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தி மாத கொண்டாட்டம்... பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம்  கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

முற்றும் திமுக - கம்யூ., மோதல்

மதுரையில் இன்று நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான பேருந்து துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனும் அக்கட்சியின் மாநகராட்சி துணை மேயர் நாகராஜனும் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில மனித உரிமை ஆணையத்தின் உரிமையை பறிக்கும் திமுக.... இபிஎஸ் கண்டனம்!

மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் திமுக அரசு மூக்கை நுழைப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”திமுக ஆட்சியில் மனித உரிமை ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது” - இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

”எனக்கே சீட் கிடைக்காமல் போகலாம்” - சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர் பொன்முடி

2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி பேசியது கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டு போட்டவர்களுக்கு போட்டு அனுப்புறாங்க.. மார்கெட்டிங் தான் நடக்குது - தமிழிசை தாக்கு

திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

போதகருக்கு விழுந்த அடி.. "எங்களுக்கு சமமா கார் ஓட்டுவியா?" - முன்னாள் அமைச்சர்களா இப்படி செஞ்சது..?

முன்னாள் அமைச்சர்கள் தூண்டுதலில் தாக்கப்பட்ட சி.எஸ்.ஐ போதகர் மருத்துவமனையில் அனுமதி.

#BREAKING || "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநர் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டீ குடிப்பதால் எதுவும் மாறாது.. சரளமாக பொய் சொல்கிறார்கள்.. சசிகலா தாக்கு

தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு தங்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாலேயோ எதுவும் மாற போறதில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தள்ளாடிருக்கும்.. ஆனால் தப்பிச்சுருச்சு... ராஜன் செல்லப்பா விமர்சனம்!

வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும். வெள்ளத்தை வைத்து சிலர் வணிகம் செய்வது உண்டு. அதை யாரும் செய்து விடக்கூடாது என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

திமுக பாதையில் விஜய்... உதயநிதிக்கு பயங்கர புரோமோஷன்... வெளுத்து வாங்கும் அர்ஜுன் சம்பத்!

உதயநிதியை ப்ரொமோட் செய்வதற்காக சீனியர் அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் செட்டில் ஆன துரை தயாநிதி?

அமெரிக்காவிலே சில காலம் தங்கிவிடலாம் என்ற முடிவுக்கு அழகிரி குடும்பம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

கொட்டித் தீர்த்த கனமழை.. தொடரும் மீட்பு பணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை... முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

#BREAKING || இபிஎஸ்-க்கு கே.என்.நேரு கண்டனம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

"வடகிழக்கு பருவமழை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.." - பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

திருச்செந்தூர் கோயிலில் தங்கும் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.