K U M U D A M   N E W S
Promotional Banner

லட்டு

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் கோயில் லட்டுவில் ‘கரப்பான் பூச்சி’ என புகார்...பக்தர்கள் அதிர்ச்சி

பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

முடிவுக்கு வந்த லட்டு விவகாரம் பொய்யை விற்ற களவாணிகள்.. தொழிற்சாலையும் இல்ல..நெய்யும் இல்ல..

திருப்பதி லட்டில் கலப்படம் செய்த சம்பவம் மொத்த இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர். கைதான இவர்கள் வெறும் பொய்யை மட்டுமே வைத்து திருப்பதிக்கே மொட்டை போட்ட சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

திருப்பதியில் இலவச உணவுடன் பக்தர்களுக்கு மசால்வடை..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு இலவச சாப்பாட்டுடன், பூண்டு, வெங்காயம் இல்லாத மசால் வடை வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.

''பவன் கல்யானா ? அது யாரு... சினிமாக்காரர்களை பற்றி கேட்கவேண்டாம்'' - மதுரை ஆதீனம்

திருப்பதி லட்டு விவகாரம் வைணவம், தான் சைவம் அது குறித்து பேச மாட்டேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

லட்டு விவகாரம் – உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் | Kumudam News 24x7

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவில், சிபிஐ, போலீசார், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளும் இடம்பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லட்டு சர்ச்சை: ’அறிக்கையை வெளியிடாதது ஏன்?’ நீதிமன்றம் கேட்ட கேள்வி!

திருப்பதி லட்டு சர்ச்சை: மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

#BREAKING: Tirupati Laddu Issue: லட்டு விவகாரம் - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

"திருப்பதிக்கு லட்டு வழங்கியதாக கூறப்படும் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் செய்த விதிமீறல் என்ன?" மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை வீடியோ.. ‘பரிதாபங்கள்’ சேனலுக்கு ஆதரவு அறிக்கை

திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் சேனலுக்கு ஆதரவாக, தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திருப்பதி லட்டு விவகாரம்.. SIT விசாரணை தற்காலிக நிறுத்தம்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆந்திர DGP திருமலா ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கிய உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டிறச்சி கலக்கப்பட்டது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளனர் நீதிபதிகள்.

கலப்பட நெய் விவகாரம்.. ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல்

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் முன்ஜாமின் கோரி ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் ராஜசேகர் மனுதாக்கல் செய்துள்ளார்.

லட்டு விவகாரம்... ஆந்திர அரசை துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு நெய் இருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

லட்டு விவகாரம்.. திருப்பதியில் அதிரடியாக களமிறங்கிய சிறப்பு விசாரணை குழு

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் விசாரணை குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

Parithabangal: லட்டு வீடியோ சர்ச்சை... H ராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட பரிதாபங்கள் டீம்... கேஸ் வாபஸ்!

திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழ்நாடு பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவிடம் பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

Tirupati Laddu : “சார் அந்த திருப்பதி லட்டு... தம்பி நோ கமெண்ட்ஸ்..” வேட்டையன் ஸ்டைலில் ரஜினி சொன்ன பதில்!

Rajinikanth About Tirupati Laddu : வேட்டையன் திரைப்படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

திருப்பதி லட்டா.. Sorry!! - ரஜினிகாந்த்

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘Sorry No Comments’ என பதிலளித்தார்.

பவன் கல்யாண் டயலாக்கை மாற்றி மாற்றி பேசுகிறார்.... ரோஜா கடும் விமர்சனம்!

கதாநாயகர்கள் படத்தில் கொடுக்கக்கூடிய டயலாக்கை எப்படி பேசுவார்களோ அதே போல் பவன் கல்யாண் ஒவ்வொரு முறையும் மாறி மாறி பேசி வருகிறார் என முன்னாள் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்.

இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?.. திருப்பதி லட்டு விவகாரத்தில் கொதித்த குஷ்பு

இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரம்.. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது வழக்குப்பதிவு

திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின்பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"மீனாட்சி அம்மன் கோயில் லட்டு தரமானது" |

Madurai Meenakshi Temple Laddu: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரமானது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம்.

Mohan G : “சமூக அக்கறையோட பேசினது தப்பா..? போலீஸார் அப்படிலாம் பண்ணாங்க..” மோகன் ஜி குமுறல்!

Director Mohan G Arrest : பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையாக பேசியதால் இயக்குநர் மோகன் ஜி-ஐ போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியான மோகன் ஜி, தனது கைது சம்பவம் குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார்.

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு சர்ச்சை.. கர்நாடகாவில் இருந்து வந்து இறங்கிய நெய்

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சைக்கு பின் கர்நாடகா மில்க் ஃபெடரேஷனின் நந்தினி பிராண்ட் நெய்யை தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது. டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட நெய் திருப்பதிக்கு வந்தடைந்தது.

சிக்கி தவிக்கும் மோகன் ஜி ... மீண்டும் செக்

பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.