K U M U D A M   N E W S

விசாரணை

பொன்னேரியில் தலை இல்லாத பச்சிளம் சிசுவின் சடலம்...நாய் இழுத்து சென்றதால் பரபரப்பு

பிறந்து 10 நாட்களே ஆன சிசுவின் சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை

நடிகர் ‘காதல்’ சுகுமாரை சிறையில் அடைக்க வேண்டும்...மீண்டும் புகார் அளித்த துணை நடிகை

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்குள்ளாகி உள்ள நடிகர் "காதல்" சுகுமாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார்

நீ அழகாய் இருக்கிறாய் எனக் கூறி பெண்ணை தாக்கிய நண்பர்...இளைஞரை நையப்புடைத்த பொதுமக்கள்

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gang Robbery : சென்னையில் கைவரிசை காட்டிய கும்பல்...பூந்தொட்டியில் சாவியை மறைத்து வைப்பவர்கள் வீடுகள் தான் டார்கெட்

Robbery Gang Arrest in Chennai : பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து திருடி விட்டு சாவியை அதே இடத்தில் வைத்து சென்று இந்த பெண் கும்பல் மீது சந்தேகம் வராத வகையில் செயல்பட்டுள்ளது

இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்...தாய் கொடுத்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி

மண்ணெண்ணையை ஊற்றி தனது மகனை எரித்ததாக தாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விபரீதம்...கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது

தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மதுரையில் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்...வீடு தேடி வந்து கைது செய்த போலீஸ்

மதுபோதையில் நண்பனை கொலை செய்தது தெரியாமல் தூங்கிய இளைஞரை வீடுதேடி கைது செய்த போலீசாரால் பரபரப்பு

ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி எரித்துக்கொலை செய்த காதலன்...ஒரு வாரத்திற்கு பின் அடையாளம் தெரிந்ததால் அதிர்ச்சி

விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை...முன்விரோதத்தால் நடந்த கொடூரம்

வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேள்வி கேட்டதால் ஆத்திரம்...முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவர்...மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

திருவிழாவில் சீறி பாய்ந்த காளைகள்...மாடு முட்டியதில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடரும் சைபர் கிரைம் மோசடி.. போலி ஆன்லைன் ரூ.90 லட்சம் திருடிய 2 பேர் கைது!

போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மூலம் ரூ. 90 லட்சத்தை திருடிய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மோசடி கும்பல் திருடிய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றியது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்...ஹவாலா கும்பல் குறித்து விசாரணை

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயிலில் கடத்தப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது காரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை வழக்கு...மதபோதகர் ஜான் ஜெபராஜின் உறவினரும் கைது

சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெனட் ஹரிஸ் கைது செய்யப்பட்டு உள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை அபகரித்து அட்டூழியம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய மாணவி சடலம்..போலீசார் விசாரணை!

சென்னை மெரினா கடற்கரையில், சரியாக தேர்வு எழுதாததால் வீட்டை விட்டு வெளியேறிய 12-ம் வகுப்பு மாணவி, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தடயங்களை சேகரித்தனர்.

பிரியாணிக்கு பணம் கேட்ட கடை உரிமையாளருக்கு கன்னத்தில் ‘பளார்’...சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

காயமடைந்த முகமது நவ்ஷத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

போலீஸ் முன்னிலையில் அரிவாள் வெட்டு...மற்றொரு போலீஸ்காரரால் உயிர்தப்பிய நபர்

அரிவாளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுவர்களால் விபத்துகள் அதிகரிப்பு...முதியவர்களுக்கு சென்னையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்

சென்னையில் கடந்த வாரம் சிறுவன் இயக்கிய கார் மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது 16 சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மறுமணம் செய்வதாக முதியவரிடம் மோசடி- 2வது கணவரால் சிக்கிய ‘ரொமாண்டிக்’ பெண்

செய்திதாள்களில் மறுமணம் செய்ய விரும்பும் வயதான ஆண்கள் அளிக்கும் விளம்பரங்களை பார்த்து அவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடுவதாக கைதான கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறுக்கே வந்த நாய்...தலைகுப்புற கவிழ்ந்த கார்...உயிர் தப்பிய இளைஞர்கள்

தகவல் அறிந்து கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள்.. விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம் போலீசார்!

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நாமக்கல்லில் எம்.பி.,வீட்டில் திடீர் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நாமக்கல் கொ.ம.தே.க எம்.பி. வீட்டில் திடீர் தீவிபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.