K U M U D A M   N E W S

9 ஆண்டுகளாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்: போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரம்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

வேகமெடுக்கும் சட்ட நடவடிக்கை! - இ-பதிவு மூலம் வழக்குகளை விரைவுபடுத்த காவல்துறையுடன் கைகோர்த்த நீதித்துறை!

காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை: ₹1 லட்சம் ரொக்கம், 13 சவரன் நகைகள் திருட்டு!

அண்ணா நகரில் உள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில், பூட்டை உடைத்து ₹1 லட்சம் பணம், 13 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகளை விமானத்தில் சென்று கைது செய்யலாம்: தமிழக டிஜிபி சுற்றறிக்கை!

வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வங்கி மோசடி வழக்கு: 14 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி குவைத்தில் கைது!

சென்னை பாங்க் ஆஃப் பரோடாவில் ₹3.5 கோடி மோசடி செய்துவிட்டு, 14 வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி முனாவர் கான், சர்வதேச போலீசாரின் உதவியுடன் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!

கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாவுக்கட்டு.. 'அது எப்படின்ணே' - பாயிண்ட்ட புடிச்ச நீதிமன்றம்!

தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!

வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Seeman in Trichy Court : சீமானை வெளியே அனுப்பிய திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி | NTK | Varun

Seeman in Trichy Court : சீமானை வெளியே அனுப்பிய திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி | NTK | Varun