திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே மகன் உறவுமுறை இளைஞர் ஒருவர், சித்தியுடன் தான் திருமணம் செய்து கொண்டு வாழ்வேன் என காவல் நிலையத்தில் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் பணம், நகை பறித்து கொண்டு மோசடியில் ஈடுபட்ட காதலன் மீது சின்னத்திரை நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.