K U M U D A M   N E W S

Fraud

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ரூ. 7 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்: தலைமறைவான 2 பேர் கைது!

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ. 60 கோடி தங்க நகை மோசடி: ART நிறுவன வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

சூர்யா வீட்டு வேலைக்கார கும்பல் ரூ. 42 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த 4 பேர் கைது!

டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - செபி அறிவிப்பு!

அதானி குழுமம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபி தெரிவித்துள்ளது. விசாரணையில் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

ஜிம் உடலை காட்டி பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது.. திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் அம்பலம்!

விவாகரத்து பெற்ற மற்றும் கணவரைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ.200 கோடி வங்கி மோசடி வழக்கு-சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்- இறந்தது போன்று வீடியோ எடுத்து நாடகமாடியது அம்பலம்

திருமண நாடகமாடி இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குற்றச்சாட்டு

நில அபகரிப்பு வழக்கில் 'ஏர்போர்ட்' மூர்த்தி கைது; நீதிமன்ற காவல் மறுப்பு!

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி மோசடி: இரிடியம் மோசடியில் 30 பேர் கைது!

ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 30 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இரிடியம் மோசடி: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் கைது - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: 2022 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் தீர்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை வங்கி மோசடி வழக்கு: 14 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி குவைத்தில் கைது!

சென்னை பாங்க் ஆஃப் பரோடாவில் ₹3.5 கோடி மோசடி செய்துவிட்டு, 14 வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி முனாவர் கான், சர்வதேச போலீசாரின் உதவியுடன் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3.71 கோடி ரூபாய் மோசடி! சகோதரிகள் கைது!

லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி வழக்கில் நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்!

நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை கௌதமி இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகளை வாடகைக்கு விடாதீர்கள்.. சைபர் கிரைம் குறித்து தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை!

இணையவழி மோசடிகளைத் தடுக்க, இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

பணமதிப்பிழப்பு நேரத்தில் மோசடி? சசிகலா பழைய நோட்டுகளில் சொத்து வாங்கியதாக அதிர்ச்சி தகவல்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.

'கூலி' பட நடிகர் வெளிநாடு செல்ல தடை.. கேரள நீதிமன்றம் உத்தரவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நிதி மோசடி வழக்கில், அதன் தயாரிப்பாளரான நடிகர் சௌபின் சாகிருக்கு வெளிநாடு செல்ல கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Gpay Scam: "அவசரமாகப் பணம் வேண்டும்" எனக்கூறி ஏமாற்றும் கும்பல் - போலீஸ் எச்சரிக்கை!

"ஜிபேவில் உடனடியாகப் பணம் அனுப்பிவிடுகிறோம்" என்று கூறி, நேரடியாகப் பணம் பெறும் மோசடிக் கும்பல்குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரூ.2,000 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

மும்பையில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி – தலைமறைவாக இருந்த பெண் கைது

தலைமறைவாக இருந்த ரம்யாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.