K U M U D A M   N E W S

கண்ணீர் விட்டு அழுத விஷால்.. விஜய்யின் த.வெ.க.வில் இணையும் அறிகுறியா?

புதுச்சேரியில் கண்ணீர் விட்டு அழுது சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால், நடிகர் விஜய் அரசியலை துவங்கட்டும், நான் இணைவது அப்பாற்பட்டது என தெரிவித்துள்ளார்.

Union Budget 2024: பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்ன?.. லிஸ்ட் போட்ட ஸ்டாலின்!

''மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஏமன், லெபனான் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. திடீர் தாக்குதல்.. அதிகரிக்கும் பதற்றம்!

ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரியை போட்டுத் தாக்கும் கனமழை.. மக்களே உஷார்.. இதை செய்யாதீங்க.. மாவட்ட ஆட்சியர் வார்னிங்!

''நீலகிரியில் கனமழை பெய்வதால் நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது'' என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகளிர் ஆசிய கோப்பை டி20... பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா... 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Indian Womens Cricket Team Won Asia Cup T20 Championship : ஆசிய மகளிர் கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரமாக வென்று சாதனை படைத்துள்ளது.

Rain Update: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு எப்படி..? நீலகிரி, கோவையன்ஸ் உஷார்!

Tamil Nadu Weather Update Today : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் தொடரும் கனமழை... அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Tamil Nadu Weather Update : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேநேரம் நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸுக்கு டிமிக்கி.. ஆற்றில் குதித்த மூவருக்கு கால் முறிவு.. நாதக நிர்வாகி கொலையில் திருப்பம்..

NTK Balamurugan Murder Case : 4 சென்ட் இடம் 20 லட்சம் மதிப்புள்ள சொத்துப்பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

நீலகிரியை துரத்தும் கனமழை.. வெள்ளக்காடான கூடலூர்.. எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

4 சென்ட் இடம்.. 20 லட்சம் ரொக்கம்... நாதக நிர்வாகி கொலை - சிறார் உட்பட 6 பேர் கைது

Naam Tamilar Katchi : 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியதை கண்டதும், பாலமுருகன் கதறிய படி உயிரை காப்பாற்றுங்கள் என ஓடியுள்ளார்.

தொடர் கனமழையால் பரிதவிக்கும் நீலகிரி.. கடும் வெள்ளப்பெருக்கு.. போக்குவரத்து துண்டிப்பு!

Heavy Rain In Nilgiris : கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை-கூடலுர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வீடியோ வெளியிட்டதால் காவலர் பணிநீக்கம்.. அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கருத்து

மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உள்துறை செயலாளர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...

IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் கட்டண உயர்வு: தேர்தல் வெற்றிக்கு திமுகவின் பரிசு.. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சாடல்!

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''

Engineering Council: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு... அமைச்சர் பொன்முடி கொடுத்த அப்டேட்

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

யாரை காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்... சந்தேகம் எழுப்பும் எடப்பாடி பழனிசாமி!

''காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டுதான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?''

'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி

மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.

மனிதாபிமானமற்ற இஸ்ரேல்...அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல்... 71 பேர் பலியான சோகம்!

மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

முதல்ல அவங்கள பிடிச்சி உள்ளே போடுங்க.. சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த இபிஎஸ்

திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது’ - இந்திய கிரிக்கெட் வாரியம் பிடிவாதம்

ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது.

பட்டியலின மக்கள் முதல்வராக முடியாது; படுகொலையின் வலி பாஜகவுக்கு தெரியும் - ஏ.என்.எஸ்.பிரசாத்

அம்பேத்கரை கொண்டாடாத இயக்கம் திராவிட இயக்கம் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் அம்பலப்படுத்தி வந்தார்.

இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

'2026 டார்கெட்'.. 'இளைஞர்கள் பலம்'.. எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. நிர்வாகிகளிடம் பேசியது என்ன?

''கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளியுங்கள்''

40 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர்... ஆஸ்திரியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியும், கார்ல் நெக்மரும் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.