K U M U D A M   N E W S

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹனிமூன் ஜோடி காணாமல் போன வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. மனைவி எங்கே?

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.