K U M U D A M   N E W S

mi

School Holiday : பசங்களுக்கு இனி ஜாலி தான்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. இத்தனை நாட்களா?

Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.

ஜகா கேட்ட இபிஎஸ் ....தடா போட்ட தயாநிதி...Tired ஆன நீதிமன்றம்

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் பதில் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 16 தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். 

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

நிபா வைரஸ் பரவல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Exam-ல Pass ஆகணுமா? சூப்பர் Idea கொடுத்த அன்பில் மகேஷ்

படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.

26 தொகுதிகளில் தொடங்கியது 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil |

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

26 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. தீவிரவாத அச்சுறுத்தலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

‘திமுக ஜெயிக்க பிரதமர் மோடி தான் காரணம்’.. ட்விஸ்ட் வைத்து பேசிய உதயநிதி!

''திமுகவின் வெற்றிக்கு இரண்டாவது காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தான்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

எந்த வைரஸும் தமிழ்நாட்டில் இல்லை - மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாட்டில் எந்த விதமான வைரஸ் காய்ச்சல்களும் இல்லை, நிபா வைரஸ் பரவலும் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவது அமைச்சர்களின் முடிவு" - திருநாவுக்கரசர் MP !

Thirunavukkarasu Press Meet: உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்குவது அமைச்சர்களின் முடிவு என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு.. 'இது தவறு'.. போலீசை விளாசிய நீதிபதி!

இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''மோகன் ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால் போலீசார் கைது செய்த விதம் சட்டவிரோதமானது’’ என்று தெரிவித்தார்.

ரேஸ் கிளப் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

Race Club Case Update: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.

என்கவுன்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் இனிமேல் என்கவுண்டர் கொலைகள் செய்யக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

National Green Tribunal : அரசு கட்டிடங்களை ரேஸ் கிளப்புக்கு மாற்ற யோசனை

National Green Tribunal : பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசு கட்டிடங்களை அகற்றி அதை கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது. 

உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Actor Mukesh Arrest : பாலியல் வழக்கில் நடிகர் கைது... சில நிமிடங்களில் விடுதலையானதால் பரபரப்பு

Actor Mukesh Arrest : பாலியல் வழக்கில் கேரள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் ஏற்கனவே முன் ஜாமின்  பெற்றதால் சில நிமிடங்களிலேயே விடுவிக்கப்பட்டார்.

Sri Lanka New Prime Minister : இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்

Sri Lanka New Prime Minister Harini Amarasuriya : இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக நியமித்தார்.

கோயில் நிலம் ஏலம் விட அறிவிப்பு... போராட்டத்தில் குதித்த மக்கள்

Tiruppur Protest : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவில்பாளையத்தில் கோயில் நிலத்தை ஏலம் விடுவதாக அறநிலையத்துறை அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகனுக்கு முடி சூட்டும் வேலைதான் நடைபெறுகிறது... ஜெயக்குமார் விமர்சனம்!

Jayakumar About Udhayanidhi Stalin : உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வருவதன் வெளிப்பாடாக தான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

TN Rains Update : உக்கிரமடையும் மழை......7 மாவட்டங்களுக்கு அலர்ட்

Tamil Nadu Rain Update Today : தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NIA Raids : சென்னையில் சத்தமின்றி இருந்த ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பு?.....சம்பவம் செய்த NIA...

NIA Raids in Chennai : பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் NIA சோதனை நடத்தியது. இந்நிலையில் சென்னை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ் மற்றும் சையது அலி ஆகியோர் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது

Mohan G Arrest : லட்டு பிரச்சனையே ஓயவில்லை.. அடுத்து பழனி பஞ்சாமிர்தமா?.. பிரபல இயக்குநர் கைது

Director Mohan G Arrest on Palani Panchamirtham : இந்திய அளவில் திருப்பதி லட்டு விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

CM Stalin Visit : தொகுதிக்கு விசிட்.. குழந்தைகளிடம் மு.க.ஸ்டாலின் புகைப்படம்

CM Stalin Visit: சென்னை கொளத்தூர் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு சென்ற முதலமைச்சர் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

Pugazhenthi : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி

Pugazhenthi on Edappadi Palanisami : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி