MahaVishnu: மகாவிஷ்ணு அலுவலகத்தில் கிடைத்த 3 ஹார்டு டிஸ்க்... வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீஸார்!
அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் இருந்து 3 ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவை பறிமுதல் செய்துள்ள போலீஸார், வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.