தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், அந்தப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் என்ற ஹென்றி மீதும், பெண் தலைமை ஆசிரியை அன்னை சீபா ஃபிளவர் லைட் மீதும் போலீசார் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் மற்றும் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு
விளாத்திகுளம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்ற ஹென்றி இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களை புள்ளியியல் பாட செயல்முறைப் பயிற்சிக்காகப் சென்னமரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு ஆசிரியர் தியாகராஜன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிகளுடன் சென்ற ஆசிரியர் தியாகராஜன், 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஆசிரியரின் கையைத் தட்டிவிட்டு ஓடிச்சென்று தனது தோழிகளிடம் அழுதுகொண்டே நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். அப்போது பிற மாணவிகளும் தங்களுக்கும் இதேபோல் ஆசிரியர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளனர்.
தலைமை ஆசிரியையின் அலட்சியமும் பெற்றோர் புகாரும்
பள்ளிக்கு வந்த பின் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் வகுப்பு ஆசிரியையிடம் புகார் கூறியுள்ளனர். வகுப்பாசிரியர், மாணவிகளுடன் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியை அன்னை சீபா ஃபிளவர் லைட்-யிடம் புகார் கூறியபோது, அவர் சற்றும் பொருட்படுத்தாமல், "இதெல்லாம் சகஜம்தான்... பெருசு படுத்தாதீங்க... நம்ம பள்ளியின் பெயர் கெட்டுப் போயிடும்... போங்க, போங்க..." என்று மிகவும் அலட்சியமாகப் பதிலளித்து மாணவிகளையும், வகுப்பாசிரியரையும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லைகள் பற்றிப் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு மற்றும் தேடுதல் வேட்டை
மாணவிகளின் புகாரின் அடிப்படையில், போலீசார் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாணவிகளின் புகாரை அலட்சியப்படுத்திய பள்ளியின் பெண் தலைமை ஆசிரியை அன்னை சீபா ஃபிளவர் லைட் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் தலைமறைவான நிலையில், அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாகப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

LIVE 24 X 7