இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளைப் பதவியேற்பு!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்
தமிழகத்தில் முதன்முறையாக செப்டம்பர் 6 இன்று காவலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் "தமிழ்நாடு காவலர் தினம்" உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கப் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில், அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.
தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தெருநாய்கள் தாக்கி பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு வேதனையுடன் அளித்த நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு;
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று (செப்டம்பர் 3 ) ஆலோசனை நடத்தியுள்ளார்.