தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளுக்காக செலவு செய்ய தயங்குவதால், அக்கட்சி நிதி பற்றாகுறையில் தவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டையை நோக்கி, மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.