"உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி"-அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை வழங்குவார் - கோவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை வழங்குவார் - கோவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
''மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியபோது கூட்டணிக் கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால் வெற்றி பெற்றோம். தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்'' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
RB Udhayakumar Criticize Udhayanidhi Stalin : முப்பெரும் விழா மேடையில் உதயநிதியை மேடையில் உட்கார வைத்துவிட்டு கீழே மூத்த அமைச்சர்களை உட்கார வைத்துள்ளனர். திமுகவின் சுயமரியாதை, சமதர்மம் எங்கே போனது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
''ஜாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி'' என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா - தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
Minister Udhayanidhis Stalin About Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் முதல்வர் ஸ்டாலின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
Electricity Leakage at Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வின்போது, அமைச்சர்கள் அமர்ந்து பார்க்ககூடிய பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.
நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியுள்ளது.
Formula 4 Car Race : Dhanush Congrats Udhayanidhi Stalin : சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BJP Leader Tamilisai Soundararajan About DMK : ரஜினிகாந்த் திமுகவில் புயலையும், சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார் என்றும் கட்சிக்காக உழைத்த துரைமுருகன் உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார்? அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், ராஜ்நாத் சிங்கை திமுக அழைத்து வந்தது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.
Speaker Appavu on Udhayanidhi Stalin as Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலின் விதையாகி செடியாகி மரமாகி தற்பொழுது காயாக உள்ளார் பழுக்க வேண்டியது மட்டும் தான் எஞ்சியுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Pa Valarmathi on Minister Anbarasan : அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன் என்றும் அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
Selvaperunthagai on Udhayanidhi Stalin as Deputy CM : யார் யாரோ தற்பொழுது இந்தியாவில் முதலமைச்சராக உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் எந்த தவறும் கிடையாது என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வரும் நிலையில், தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற உதயநிதி என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
''முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.