அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 'அதிமுக உரிமை மீட்புக் குழு' என்ற பெயரில் தனி அணியாகச் செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம், இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களாகத் தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வந்த அவர், இன்று இந்த இறுதி முடிவை எடுத்துள்ளார்.
திடீர் சந்திப்பும் அறிவாலய வருகையும்
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த ஓ. பன்னீர்செல்வத்தை, இன்று காலை 9 மணியளவில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிட ஆலோசனைக்குப் பிறகு, இருவரும் ஒரே காரில் அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டனர். அங்கு ஓ.பி.எஸ்-ஐ அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். முன்னதாகவே அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் அறிவாலயத்தில் காத்திருந்தனர்.
உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து
அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், அவருக்குச் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், தனது மகன் ரவீந்திரநாத், எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் முக்கிய ஆதரவாளர்களுடன் முறைப்படி திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அக்கட்சியில் இணைந்தார். அதிமுகவில் மீண்டும் இணைய பாஜக உதவும் என்று அவர் காத்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான மறுப்பு மற்றும் தனது ஆதரவாளர்களின் அடுத்தடுத்த விலகல் போன்ற காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மாறிய அடையாளங்கள்
திமுகவில் இணைந்த வேளையில் ஓ. பன்னீர்செல்வத்திடம் சில மாற்றங்கள் தென்பட்டன. தனது சட்டைப் பையில் வழக்கமாக வைத்திருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவர் அகற்றியிருந்தார். அதேபோல், தனது காரில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படமும் அகற்றப்பட்டிருந்தது. இந்த அடையாள மாற்றங்கள் அவர் அதிமுகவுடனான தனது நீண்டகாலத் தொடர்பைத் துண்டித்துவிட்டு, புதிய அரசியல் பாதையைத் தொடங்கியுள்ளதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
திமுகவில் முக்கிய பொறுப்பு
ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு திமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அவரது ஆதரவாளரான ஐயப்பனை உசிலம்பட்டி தொகுதியில் களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LIVE 24 X 7