ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று இரவு 8 மணியளவில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மனதளவில் வேதனையை தந்தது. இந்தியாவின் முப்படைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி பெறச்செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்
ஆப்ரேஷன் சிந்தூரை நமது வீரர்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலை என்ன என்பதை தீவிரவாதிகளுக்கு காட்டி உள்ளோம். இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர் என பாராட்டினார். மேலும், பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகளை வானத்திலேயே இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தது. மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
இந்தியாவின் நடவடிக்கையை பயங்கரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும். இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி தகர்த்தன. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தலைமையகங்கள் தகர்க்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும். இந்தியாவின் தாக்குதல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று அழித்துள்ளோம். ஆனால் கோவில்கள், குருத்வாராக்கள், பள்ளிகளை குறிவைத்து கோழைத்தனமான தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இந்தியாவை மிரட்ட முடியாது
மேலும், ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது. ஒரே தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு புதிய பாதையை ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் காட்டியுள்ளோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிக்கு பதிலடி கொடுப்பதில் முக்கிய பங்காற்றின. இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.
தாக்குதலில் இருந்து தப்பிக்க உலக நாடுகளிடம் மண்டியிட்டு கெஞ்சியது பாகிஸ்தான். இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது என்றார்.மேலும், அணு ஆயுதங்களை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
சிந்து நநிநீரை வழங்க முடியாது
பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளுக்கும் உதவி செய்பவர்களும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எதிர்காலத்தில் வாலாட்டினால் இந்தியாவின் பதிலடி இன்னும் பயங்கரமாக இருக்கும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் விரைவில் அழிவை சந்திக்கும். போர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது, பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும் என்றார்.
மேலும், நம்மைப் பொறுத்தவரை ஒற்றுமையே பலம், ஒற்றுமையே முக்கியம். ரத்தம் பாய்ந்த நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாது, சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்க முடியாது எனவும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.