சினிமா

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும்: நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும்: நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்!
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும்: நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்
இந்தியாவின் சிறந்த கார் ரேஸர்களில் ஒருவராகவும் திகழும் அஜித், பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று வருகிறார். நடிப்பைத் தாண்டி, அவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

"இந்தியாவும் F1 உலக சாம்பியனை வெல்லும்" என்று நடிகர் அஜித்குமார் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் அஜித் பேசியதாவது,

"நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸை எளிமையானது என்று நினைக்கிறார்கள். இது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எவ்வளவு கடினமானது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எனக்காக அல்ல, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும். நம்மிடம் நிறைய திறமையான இந்திய ரேஸர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை, ஒரு நாள் இந்தியாவும் F1 உலக சாம்பியனை வெல்லும்."

அஜித்தின் இந்த உரை, ரசிகர்களுக்கும், இந்திய இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகப் பாராட்டப்பட்டுள்ளது.



இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம், உலகளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, அஜித் குமார் தற்போது கார் பந்தயங்களில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'AK 64' திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.