சினிமா

என்ன பெத்தாரு..மனதை வருடும் சூரியின் மாமன் பட டிரைலர்!

கருடன்,விசாரணை,கொட்டுக்காளி போன்ற படங்களில் நடிப்பில் மிரட்டிய நடிகர் சூரியின் மாமன் பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

என்ன பெத்தாரு..மனதை வருடும் சூரியின் மாமன் பட டிரைலர்!
Maaman trailer looks perfect blend of emotions
குடும்பப் பின்னணியிலான கதையினை கொண்ட “மாமன்” படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகனாக விசாரணை, கருடன் படங்களில் அசத்திய சூரி (actor soori) இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தினை இயக்கியுள்ளார். நடிகர் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்‌ஷிமி, சுவாஸ்திகா, பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹீசாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் (Maaman trailer) இன்று வெளியாகியுள்ளது.

அக்கா...அக்கா..எந்திரி உன் பையனுக்கு காது முளைச்சிருக்கு என சூரியின் வசனத்தோடு ஆரம்பமாகும் டிரைலர் இறுதி வரை மாமாவாகிய சூர்யாவிற்கும், அவரது அக்காவின் குழந்தைக்கும் இடையேயான உணர்ச்சிக்களின் குவியலை கண் முன்னே நிறுத்தியுள்ளது. என்ன பெத்தாரே போன்ற வட்டார தமிழ் சொற்களும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள கமர்ஷியல் படமாக மாமன் இருக்கும் என்பதை டிரைலர் மூலம் யூகிக்க முடிகிறது.

டிரைலரை பார்த்த ரசிகர்களும் “நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் குடும்ப பிணைப்புகளை மையமாக வைத்து திரைப்படம் வரப்போகிறது” என பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் பரவலான பாரட்டுகளை பெற்றுள்ள மாமன் பட டிரைலர் வெளியான 5 மணி நேரத்தில் 7 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.