சினிமா

இருமுடி தாங்கி சபரிமலையில் சாமி தரிசனம் செய்த கார்த்தி-ரவி மோகன்

இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இருமுடி தாங்கி சபரிமலையில் சாமி தரிசனம் செய்த கார்த்தி-ரவி மோகன்
இருமுடி தாங்கி சபரிமலையில் சாமி தரிசனம் செய்த கார்த்தி-ரவி மோகன்
கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கார்த்திக், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி, முதன் முறையாக சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார். தலையில் இருமுடியுடன் மனமுருக அவர் சாமி தரிசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவருடன் நடிகர் ரவி மோகனும் சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.