சினிமா

13 ஆண்டுகளுக்கு பிறகு.. 'கும்கி 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கும்கி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

13 ஆண்டுகளுக்கு பிறகு.. 'கும்கி 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Kumki 2 first look poster released
இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'கும்கி'. நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தத் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'கும்கி - 2' திரைப்படம் உருவாகி வருகிறது. நேற்று (செப்.11) வெளியான மோஷன் போஸ்டரில், முதல் பாகத்தில் உயிரிழந்த யானை மீண்டும் பிறந்துவிட்டது என்ற வாசகம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்

'கும்கி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை நடிகை ஸ்ருதிஹாசன் அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்தப் படத்தில், மதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.