சினிமா

YOUTUBE CHANNEL தொடங்கிய AK..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?

'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாக அஜித்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

YOUTUBE CHANNEL தொடங்கிய AK..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
YOUTUBE CHANNEL தொடங்கிய AK..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
நடிகர் அஜித்குமார்... தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான இவர், சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில், தல – தளபதி என்று சோஷியல் மீடியாவில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. ரசிகர்கள் இவரை ‘தல’ என்று அன்போடு அழைத்துக் கொண்டிருந்த நிலையில், இனி என்னை ஏகே அல்லது அஜித்குமார் என்றே அழையுங்கள் ரசிகர்களுக்கு அன்புக் கோரிக்கை வைத்தார்.

அஜித்திற்கு சினிமாவை தவிர வேறு எந்த நேரத்திலும் கேமராவிற்கு முன் இருக்க பிடிக்காதாம். இதுவரை இவருக்கு சமூக வலைதள பக்கமும் இல்லை. கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சூடு என இவருக்கு சாகச விளையாட்டு போட்டிகள் மிகவும் பிடிக்கும். இவருக்கு பைலட்ஸ் லைசன்ஸ் கூட இருக்கிறது.

அஜித், நடிப்பில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஆண்டில் இந்த வருடம்தான் 2 படங்கள் வெளியானது. விடாமுயற்சி படம் கைக்கொடுக்கவில்லை என்றாலும், குட் பேட் அக்லி படம் பெரிய ஹிட் அடித்தது. சமீபத்தில் பத்மபூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகையச் சூழலில், அண்மைக்காலமாகவே அஜித் மிகவும் ஆக்டிவாக, பொதுவெளியில் தலைக்காட்டுவது, கிரிக்கெட் போட்டிக்கு வந்து செல்வது, நேர்காணல் கொடுப்பது என படு ஆக்டிவாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும், இதற்கு பின்னால் அஜித் பெரும் திட்டத்தை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது, நடிகர் விஜய் அரசியலுக்குள் குதித்துள்ளதால், தனக்கான மார்கெட்டை ஏற்ற அஜித் திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் தான் இந்த ஆண்டு 2 படங்கள் வெளியானது என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியும் வருகிறார் அஜித் என்று கூறப்படுகிறது.

ஒருபக்கம் சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் திறந்த நிலையில், தன்னுடைய ரேஸ் நிகழ்வுகளை வைத்து பிறர் பணம் சம்பாதிப்பதால், தானே இனி தன்னுடைய ரேஸை வைத்து பணம் சம்பாதிக்க முடிவெடுத்துவிட்டார் அஜித் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

அதனால்தான் தற்போது Ajith kumar Racing என்ற யுடியுப் சேனலை தொடங்கியுள்ளார் அஜித் குமார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த சேனல் தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் வெறும் 4 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே இந்த சேனலுக்கு கிடைத்துள்ளது.

இதனைப்பார்த்த ரசிகர்கள், விஜய் கட்சி தொடங்கி யூடியூப் சேனலை துவக்கியபோது லட்சக் கணக்கில் Subscriberகள் வந்தார்கள், ஆனால் அஜித்திற்கு செல்ஃப் எடுக்கவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். இதனால், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் மீண்டும் ஆக்டிவாகியுள்ளனர்.