GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பாம்”. “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வாழ்வின் வினோதங்களைப் பேசும் ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், மற்றும் நடிகர்கள், படத்தின் தனித்துவமான கதைக்கரு மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்துப் பாராட்டினர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "அர்ஜூன் தாஸ் பிரதர், இந்தப் படத்தின் மூலம் தனது இமேஜை உடைத்து நடித்துள்ளார். அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது" என்று பாராட்டினார். நடிகர் மணிகண்டன் பேசுகையில், "அர்ஜூன் தாஸ் அவரது முதல் படத்திலேயே எப்படி அவ்வளவு நம்பிக்கையுடன் நடித்தார் என ஆச்சரியப்பட்டேன். தொடர்ந்து முயற்சிக்கும் அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள்" என்றார்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசுகையில், "வில்லன் நடிகர் ஒரு இன்னோசன்ஸ் கதாபாத்திரத்தை செய்வது இந்தியாவிலேயே ரஜினி சார் தான் சிறப்பாகச் செய்வார். அவருக்குப் பிறகு அர்ஜூன் தாஸ் தான்," என்று அர்ஜூன் தாஸின் நடிப்பைப் புகழ்ந்தார்.
நடிகர் காளி வெங்கட் பேசும்போது, "இந்தப் படத்தில் இப்படி ஒரு வாய்ப்பு தந்த இயக்குநர் விஷால் வெங்கட்டுக்கு நன்றி. பிணமாக நடிக்கும் ஒரு அருமையான கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி" என்றார். சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் பேசிய சக்திவேலன், "மண்டேலா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களைப் போல இந்த 'பாம்' படம் இனிமையான அனுபவத்தைத் தரும்" என்று குறிப்பிட்டார்.
இசையமைப்பாளர் டி. இமான், "இந்தப் படம் 'முள்ளின் மேல் நடப்பது' மாதிரியான ஒரு கதை. ஆனால் அதை மிக அழகாக இயக்கியுள்ளார் விஷால் வெங்கட். இந்தப் படத்தில் பல புதுமுகப் பாடகர்களுக்கு வாய்ப்பு தந்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.
படத்தின் நாயகியான ஷிவாத்மிகா ராஜசேகர், "இவ்வளவு பெரிய கலைஞர்களுடன் நடித்தது பெருமையாக உள்ளது. இந்தப் படத்திற்காகக் கடுமையாக உழைத்த இயக்குநர் விஷால் சாருக்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும்," என்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய இயக்குநர் விஷால் வெங்கட், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார். "இந்தக் கதைக்கு இவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து சிறப்பாக உழைத்துள்ளனர். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.
"பாம்" திரைப்படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.