சினிமா

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி!

டூரிஸ்ட் ஃபேமிலி எனும் அற்புதமான படத்தை பார்த்ததாகவும், நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையிலும், தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தததாக இயக்குநர் ராஜமெளலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி!
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி!
சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந்த் இயக்கியுள்ளார்.

மே 1 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. திரைபடம் வெளியான 20 நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டியிருக்கிறார்.

பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமெளலி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை வெகுவாக பாரட்டியுள்ளார். திரைப்படம் குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அற்புதமான படத்தை பார்த்தேன். நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையிலும், தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. அபிஷன் ஜீவிந்தின் எழுத்து, இயக்கம் சிறப்பாக இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் மிகச்சிறந்த திரைப்பட அனுபவத்தை அளித்தமைக்கு நன்றி. இந்த படத்தை தவற விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ராஜமௌலியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் ராஜெமெளலியின் எக்ஸ் தள்ப்பதிவை தனது எக்ஸ் தளத்தி ஷேர் செய்து, "நன்றி ராஜமௌலி சார் உங்கள் ட்விட் எங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் என்றும், உங்களது வாழ்த்து இந்த நாளை இன்னும் அற்புதமாக மாற்றியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.