இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃப்ரீடம்’. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் வரும் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் சத்ய சிவா பேசியதாவது, “என்னை என் குடும்பம் ஃப்ரீடமாக விட்டதால் தான் இப்படத்தை எடுக்க முடிந்தது அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே தங்களால் முடிந்த அளவு மிகக் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். ஒருவரை நல்லவராகக் காட்ட, பல சீன்கள் வைக்க வேண்டும். ஆனால் சசிக்குமார் சாரை காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகை லிஜோமோல் ஜோஸ், “நான் தமிழ்ப்படங்கள் செய்து கொண்டு தான் உள்ளேன். ஆனால் இந்தப்படத்தில் நான் இலங்கைப் பெண்ணாக நடித்துள்ளேன். வழக்கமாக பேசக்கூடிய தமிழே எனக்கு கஷ்டம், ஆனால் இதில் இலங்கைத் தமிழ் பேசி நடித்துள்ளேன், அதிலும் இயக்குநர் ஒவ்வொரு சீனுக்கும் கரக்சன் சொல்லிக்கொண்டே இருப்பார், நன்றாகப் பார்த்துக்கொண்டார். சசிக்குமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. ஷீட்டிங் போது எனக்கு சிக்கன் பாக்ஸ் வந்து விட்டது அப்போது சசிக்குமார் சார் தான் வந்து ஆதரவாகப் பேசி ஹாஸ்பிடல் அனுப்பி வைத்தார். இப்படத்தில் எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள் அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.
நடிகர் சசிகுமார் பேசியதாவது, “‘ஃப்ரீடம்’ மனதுக்கு நெருக்கமான படம். இந்தப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் போல் காமெடியாக இருக்காது. இது ஜெயிலில் படும் கஷ்டத்தைச் சொல்லும் படம், ஆடியன்ஸுக்கு அதைத் தெளிவு படுத்தி விட வேண்டும். இந்த படத்துக்கு ’சுதந்திரம்’ என்று டைட்டில் வைக்க நினைத்தோம். அது ஏற்கெனவே வைத்துவிட்டார்கள். ‘விடுதலை’ என்று வைக்க முடியாது. இப்போது எல்லாமே ஓடிடி நிறுவனங்களின் கையில்தான். டைட்டில் கூட அவர்கள் கைக்கு சென்றுவிட்டது. அதனால் தான் ‘ஃப்ரீடம்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். இயக்குநர் சத்ய சிவாவின் ஒர்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என தெரிவித்தார்.