சினிமா

நடன இயக்குநர் தினேஷ் மீது மோசடி புகார்.. சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்!

விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 பேரை ஆட வைப்பதாகக் கூறி ரூ.35 லட்சத்தை முறைகேடு செய்திருப்பதாக பிரபல நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது.

நடன இயக்குநர் தினேஷ் மீது மோசடி புகார்.. சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்!
நடன இயக்குநர் தினேஷ் மீது மோசடி புகார்.. சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்!
நான் ரெடி தான் என்ற விஜய் நடித்த பாடலுக்காக 1000 பேரை ஆட வைத்ததாக கூறி லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்திடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது. தயாரிப்பாளரிடம் ரூ.35 லட்சம் வாங்கிக்கொண்டு, நடனம் ஆடியவர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ராஜூ சுந்தரம் மாஸ்டரிடம் குழு நடனமாடிய தினேஷ், 2001 ஆம் ஆண்டு மனதை திருடி விட்டாய் படத்தின் மூலம் நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 25 வருடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் தினேஷ் மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.

தற்போது, தமிழ் சினிமா நடன இயக்குனர்கள் சங்க தலைவராக தினேஷ் உள்ள நிலையில், ஒரு குப்பை.கதை, நாயே பேயே உள்ளிட்ட திடைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து தற்போது சங்கத்தினர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படத்தில் நடனக்கலைஞர்களை ஏமாற்றியது தொடர்பாக புகார் அளித்த நபரை சமரசம் பேசுவது போல தனியாக அழைத்துச்சென்று அடித்து உதைத்ததும், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் துணை தலைவர் கல்யாண் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து கல்யாண மாஸ்டர் தரப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நடன இயக்குனர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அதேபோல, சங்க உறுப்பினர் ஒருவர்மீது பாலியல் புகார் தரப்பட்டது. அதுகுறித்தும் தினேஷ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இன்னொரு குற்றச்சாட்டு உள்ளது. "பாலியல் புகார் சுமத்தப்பட்டவர் வீட்டில் கை நினைச்சு இருக்கேன், அவருக்கு எதிராக செயல்பட மாட்டேன்" என்று தினேஷ் சொன்னதாக கூறப்படுகிறது.

புகார் தெரிவித்த நபர்களை கொண்டும், தினேஷை பதவியில் இருந்து நீக்க பெரும்பானமையான உறுப்பினர்களும் இருப்பதால், துணை தலைவர் கல்யாண் பொதுக்குழு கூட்டியுள்ளார். அப்போது தினேஷ் தனது ஆதரவாளர்களுடன் வந்து அனைவரையும் வெளியேற்றி அட்டகாசம் செய்ததாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.