கோமாளி, லவ் டூடே, டிராகன் என தொட்டதெல்லாம் ஹிட்டு என கோலிவுட்டின் சென்சேஷனாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் டியூட் (DUDE) திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனரும், நடிகருமான ப்ரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாபிக். ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்த அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்.,21 ஆம் தேதி வெளியான திரைப்படம் டிராகன். இந்தப்படம் வெளியான 10 நாட்களில் 100 கோடி வசூலித்தது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் என இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இன்னும் ஒரிரு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதான். இதனிடையே, கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் டியூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன், மமிதா பைஜு, சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
5 மொழிகளில் வெளியாகவுள்ள டியூட்:
டியூட் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக தயாரிப்புக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள டியூட் திரைப்படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கும் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படமும் தீபாவளி வெளியீடு நோக்கி படப்பிடிப்பு நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ள ப்ரதீப் ரங்கநாதன் டியூட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்கள் வரிசையில் இடம்பிடிப்பாரா? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.