இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பல தலைமுறைகளைக் கவர்ந்தவர்: பிரதமர் மோடி
நடிகர் ரஜினிக்கு தனது 'எக்ஸ்' பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
வயதை வென்ற வசீகரம்: முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் Style Magic: எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாகக் கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு" என்று தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7