கோமாளி, லவ் டூடே, டிராகன் என தொட்டதெல்லாம் ஹிட்டு என கோலிவுட்டின் சென்சேஷனாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் (DUDE) மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படங்கள் திரையில் வெளியாக தயாராக உள்ளன. தீபாவளி தினத்தன்று டியூட் திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்த அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்.,21 ஆம் தேதி வெளியான திரைப்படம் டிராகன். இந்தப்படம் வெளியான 10 நாட்களில் 100 கோடி வசூலித்தது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. இதனால், இவரது அடுத்த படங்கள் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:
’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கைக்கோர்க்கிறார் பிரதீப் ரங்கநாதன். முதலில் இந்த படம் சிவகார்த்திகேயனை வைத்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக இருந்தது. ஆனால் பட்ஜெட் பிரச்சினைகள் காரணமாக கைவிடப்பட்டது. பின்னர் 2023 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதனை வைத்து மீண்டும் தொடங்கப்பட்டது. படத்திற்கு முதலில் "LIC" என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் LIC நிறுவனம் காப்புரிமை தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியதால் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (LIK) என்று மாற்றப்பட்டது.
பிரதீப் ரங்கநாதனுடன், எஸ். ஜே. சூர்யா, கிருத்தி ஷெட்டி, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.ரௌடி பிக்சர்ஸ் (நயன்தாரா, விக்னேஷ் சிவன்) மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ (லலித் குமார்) ஆகிய இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படமானது வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.