கேரளாவில் ராப் இசை மூலம் பிரபலமான பாடகர் வேடன் என அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி மீது பாலியல் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவரது முன்ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவரை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அடுக்கடுக்கான பாலியல் புகார்கள்
கடந்த ஜூலை 30 ஆம் தேதி, கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில், திருக்காக்கரை போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் புகாரில், தன்னைக் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துப் பலமுறை உடலுறவு கொண்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை இந்த உறவு நீடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (2) (n) இன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் புகார்களை அளித்துள்ளனர். இந்த இரு பெண்களும் கேரள முதலமைச்சரின் அலுவலகத்தில் புகார்களை அளித்தனர். இந்தச் சம்பவங்கள் 2020-2021 காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பெண், சாதி இசை குறித்த ஆராய்ச்சி தொடர்பாக வேடனைத் தொலைபேசியில் அழைத்தபோது, கொச்சிக்கு வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதை எதிர்த்தபோது துன்புறுத்தப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார். மற்றொரு பெண், வேடனின் இசையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பழகி, பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கும், சட்ட நடவடிக்கைகளும்
முதல் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வேடன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேடன் தலைமறைவானார். இதனால், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லக்கூடும் என கருதிய போலீசார், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்நிலையில், இன்று முன்ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், வேடனை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால், அவர் உடனடியாகக் கைது செய்யப்பட மாட்டார்.
பிரபலமான பாடகர்
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." போன்ற சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்கள் மூலம் வேடன் என அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, யூடியூப் தளத்தில் பிரபலமடைந்தார். 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடல்கள் கேரளாவில் மட்டுமல்லாமல், தென் இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. இந்நிலையில், அவர் மீது அடுத்தடுத்து பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.