சினிமா

சிவகார்த்திகேயனின் 'மதராஸி'.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான 'மதராஸி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 'மதராஸி'.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Madharaasi OTT release date announced
சிவகார்த்திகேயன் நடிப்பில், பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'மதராஸி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அக்டோபர் 3-ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

படத்தின் விவரங்கள்

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் வெளியான இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.