ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அஜித்தின் 64-வது படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் இளம் நடிகை ஸ்ரீலீலா இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அஜித்குமார் 64
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலக அளவில் ரூ.220 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அஜித்தின் 64வது படத்தையும் இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்குக் கிடைத்துள்ளது. அஜித்தின் 64-வது படத்தைத் தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று அஜித் தெரிவித்திருந்தார். தற்போது, படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் படத்தில் ஸ்ரீலீலா?
இந்த நிலையில், அஜித்தின் 64-வது படத்தில் இளம் நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான இவர், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார்.
குறிப்பாக, 'குண்டூர் காரம்' படத்தில் இடம்பெற்ற 'குர்ச்சி மடத்தப்பெட்டி..' பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அஜித்தின் 64-வது படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.