குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. இதில் விஷவாஸ்குமார் ரமேஷ் என்ற நபரை தவிர்த்து 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானத்தில், இரண்டு விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் பயணித்திருந்தனர். விமானத்தை இயக்கிய 55 வயதான கேப்டன் சுமித் சபர்வால் சுமார் 8,000 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர். அவருடன் இணைந்து விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர், சுமார் 1,000 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி கிளைவ் குந்தர் தனது நண்பர் என்று பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார். இவர் 12 பெயில் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
துணை விமானி கிளைவ் குந்தர் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில், "அகமதாபாத்தில் நடந்த கற்பனை செய்ய முடியாத துயரமான விமான விபத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் குடும்ப நண்பர் கிளைவ் குந்தர் இந்த விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து இன்னும் வேதனையாக இருக்கிறது. அவர் அந்த துரதிர்ஷ்டவசமான விமானத்தை இயக்கிய ஒரு அதிகாரி. கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பலம் அளிக்கட்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி..
நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி கடந்த 2017 ஆம் வெளியான 'எ டெத் இன் தி கஞ்ச்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 'ஜின்னி வெட்ஸ் சன்னி', 'ஹசீன் தில்ருபா', 'லவ் ஹாஸ்டல்', '12 பெயில்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக '12 பெயில்' திரைப்படம் அவருக்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது. கடந்த 2023 ஆண்டு வெளியான இந்த படம், இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'தி சபர்மதி ரிப்போர்ட்' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த படம் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. தீராஜ் சர்னா இயக்கத்தில் உருவான இந்த படம், இந்திய அளவில் ரூ.34.24 கோடி வசூல் செய்துள்ளது.