சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் இல்லம் மற்றும் அங்குள்ள பங்களாதேஷ் துணை தூதரகத்திற்கு மர்ம நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்த போலீசார் அந்தப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், அந்த மிரட்டல்கள் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த 11 ஆம் தேதி போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் வீடுகளில் 5 'ஆர்டிஎக்ஸ்' (RDX) ரக வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் வெடிக்கும் என்றும் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இந்த மிரட்டல்களை விடுத்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LIVE 24 X 7