இந்தியா - பாக். போர் பதற்றம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி - இயல்பு நிலையில் மக்கள்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி - இயல்பு நிலையில் மக்கள்!
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக கடந்த 3 நாட்களாக நடந்து வந்த இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துதது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பயங்கரவாதிகளின் 9 நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதல், நடந்த இத்தாக்குதலுக்கு எதிராக, பாகிஸ்தானும் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவான நிலையில், சண்டையை நிறுத்தும்படி அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்த சில் மணிநேரங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.

தாக்குதலை அறிவித்த சில மணிநேரங்களில், மீண்டும் ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானதால், மீண்டும் பதற்றம் அதிகரித்தது. ஆனால், போர்நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறவில்லை என்றும், காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை அந்நாட்டு அமைச்சர் தரார் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளும் திங்கட்கிழமை மீண்டும் பேச உள்ளதாக கூறப்படும் நிலையில், சண்டை நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது. பரபரப்பாக இருந்து வந்த ஜம்மு நகர சாலை அமைதியாக காட்சியளித்து வருகிறது. அக்னூர், பிரோஸ்பூர். ரஜோரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. டிரோன்கள், துப்பாக்கிச் சூடு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை.

மேலும், மின்சார விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்னும் சிவப்பு எச்சரிக்கையில் தான் இருக்கிறோம். சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்; தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், விரைவில் நற்செய்தி வந்து சேரும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பதற்றங்கள் இன்றி அன்றாடப் பணிகளைத மக்கள் தொடங்கியுள்ளனர். வழக்கம்போல் வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ்-ல் மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்; முன்னெச்சரிக்கையாக எல்லை பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 'ரெட் அலர்ட்' நீடித்து வருகிறது.