இந்தியா - பாக். போர் பதற்றம்

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இல்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தாகுதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ளை எல்லைப்பகுதிகளான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இந்திய எல்லை பகுதியில் ட்ரோன், பீரங்கி, போர் விமானங்கள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் முப்படைகளும் தாக்குதலில் இறங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இரண்டு நாடுகளும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இருநாடுகளுக்கும் மத்தியில், போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர் தாக்குதல் நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இல்லாமாபாத்தின் முமர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் போர் விமானங்களில் பாகிஸ்தான் விமானத்தளங்கள் மீது, ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் போர் விமானங்கள் உள்பட இந்த சொத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் அகமது சவுதிரி தெரிவித்துள்ளார்.