ஐபிஎல் 2025

IPL2025: மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் போட்டிகள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தால் நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போடு, மே 15 ஆம் தேதிக்கு பிறகு போட்டி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியாகியுள்ளது.

IPL2025: மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் போட்டிகள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
IPL2025: மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் போட்டிகள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை கையிலெடுத்த நிலையில், போர் பதற்றம் காரணமாக ஐபிஎல்2025 போட்டிகள் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில், பதற்றம் தணிந்து காணப்படுவதால் ஐபிஎல் போட்டியை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ ஆலோசணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 11 ஆம் தேதி ஐபிஎல் 2025 சீசன் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான, BCCI -ஐ ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த கூட்டத்தில், மீதமுள்ள லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டிகளை எங்கு நடத்தலாம் போன்ற ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் லீக் போட்டிகள் உட்பட அனைத்து போட்டிகளையும் தென்னிந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக முன்னர் தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை, ஐதரபாத், பெங்களூர் போன்ற மைதானங்களில் போட்டி நடைபெறும் தகவல் வெளியான நிலையில், ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் நடந்த தாக்குதல் மற்றும் போர் பதற்றத்தின் காரணமாக, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சிலர் நாடு திரும்பிய நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.