ஐபிஎல் 2025

MIvsRR: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு..தொடருமா மும்பையின் வெற்றி பயணம்?

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 217 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

MIvsRR: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு..தொடருமா மும்பையின் வெற்றி பயணம்?
mumbai indians set a target of 218 runs for rajasthan royals
18-வது சீசன் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே-ஆப் செல்ல அனைத்து அணிகளும் தங்களது முழு திறமையினை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோகித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பவர் ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தனர். எப்போதும் சிக்ஸர்களை பறக்கவிடும் ரோகித் இந்த போட்டியில் பவுண்டரிகளாக பந்துகளை விரட்டினார். ரிக்கல்டன் மறுமுனையில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 116 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் ரியான் பராக் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் தீக்‌ஷானா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் கூட்டணி சேர்ந்த சூர்யாக்குமார் யாதவ்- ஹார்த்திக் பாண்டியா இணை அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் குவிக்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்களை குவித்தது. சூர்யக்குமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 48 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த போட்டியில் இதுவரை தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.