இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு பங்கில்லை -விக்ரம் மிஸ்ரி விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு பங்கில்லை -விக்ரம் மிஸ்ரி விளக்கம்
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து, பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ஏவுகனைகளைக்கொண்டு அழித்தது. இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு சிம்லா ஒப்பந்தம் ரத்து, சிந்துநதி நீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து போன்றவை ரத்து செய்யப்பட்டது. 3 நாட்களுக்கு மேலாக நடந்த தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாதிகள் பலர் உயிரிழந்தனர். இந்தியாவில் அப்பாவி பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். திடீரென இருநாடுகளுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், போர் பதற்றம் தணிந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலமாக தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சண்டை நிறுத்த உடன்பாடுகள் மற்றும் அமைதிக் கட்டுப்பாடுகள் தொடர்பாக வெளிநாடுகளின் பங்கு குறித்து சமீபகாலமாக மீடியாக்களில் வதந்திகள் பரவியிருந்தன. குறிப்பாக, அமெரிக்கா இந்த அமைதிக்கான ஊடகங்களாக இருந்ததா என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி,செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் என்பது முழுக்க முழுக்க இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் வந்த ஒரு முடிவாகும். இதில் எந்த வெளிநாட்டு நாடும், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட பெரிய சக்திகள் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், பாகிஸ்தானுடன் அமைதி நிலவ வேண்டியது இந்தியாவின் நிலைப்பாடு என்றும், எல்லைப் பிரதேசங்களில் குடியிருக்கும் மக்களின் பாதுகாப்பும் மற்றும் மன அமைதிக்காக மட்டுமே இந்திய அரசு மிகவும் முக்கியமான முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இந்​தியா - பாகிஸ்​தான் இடையே சண்டை நிறுத்​தத்திற்கு அமெரிக்க உதவிய​தாக தொடர்ந்து தகவல்கள் உலா வரும் நிலையில், விக்​ரம்​ மிஸ்​ரி அதனை திட்​ட​வட்​ட​மாக மறுத்​துள்​ளார்.