உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சிக்கன் ஃப்ரைக்காக (Chicken Fry) ஏற்பட்ட வாக்குவாதம், மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே கைகலப்பாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கன் ஃப்ரைக்காக கைகலப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் ஒரு தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. திருமண விருந்தில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் ஃப்ரை கவுண்டரில், அதனை எடுப்பதற்காக விருந்தினர்கள் கூட்டம் கூடினர். அப்போது, யார் முதலில் எடுப்பது என்பதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதகு. இது தீவிரமடைய ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளனர்.
வைரல் வீடியோ
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், "சண்டை நடந்தபோது, அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுடன் நெரிசல் ஏற்பட்டது. இதில் மாரடைப்புப் பிரச்சினை இருந்த ஒரு விருந்தினர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்று தெரிவித்தார். இந்தச் சண்டையின்போது மக்கள் பயத்தில் ஓடுவதும், ஒருவரையொருவர் தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காவல்துறையின் தலையீடு
இதற்கிடையில், திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சண்டையை உடனடியாகக் கட்டுப்படுத்தினர். மேலும் மோதல் ஏற்படாமலிருக்க, திருமணச் வரவேற்பு நிகழ்ச்சி முழுவதுமாக முடிவடையும் வரை போலீசார் மண்டபத்திலேயே பாதுகாப்புக்காகத் இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

बिजनौर में शादी में चिकन फ्राई को लेकर बारातियों में भिड़ंत! मैरिज हॉल में जमकर हुई मारपीट, कई लोग घायल pic.twitter.com/YZW1nx5irk
— news for you (@newsforyou36351) November 3, 2025
LIVE 24 X 7