தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடையும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கடைசி நாளில் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அந்தத் தொகுதியில் அவர் 8-வது முறையாகக் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இந்த முறை போடி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக போடி தீர்த்ததொட்டி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது மனுவை ஒப்படைத்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முன்னிலையில் இன்று மனுத் தாக்கல் செய்தார். அதேபோல், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன் மற்றும் அவிநாசியில் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோரும் இன்று தங்களது வேட்புமனுக்களை முறைப்படி தாக்கல் செய்தனர்.

LIVE 24 X 7