தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தொடங்கியுள்ள தனது மக்கள் சந்திப்புப் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று (செப். 27) நாமக்கல்லில் பேசினார். அப்போது, ஆளும் திமுக அரசையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
நாமக்கல்லின் பெருமையை எடுத்துரைத்த விஜய்
"நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சுகிற `தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்ற வரிகளை விஜயகாந்த் சார் சொன்னார். அதை எழுதியவர் நாமக்கல் மேகனூரில் பிறந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைதான். தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்கியதும் இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சுப்பராயன் அவர்கள்தான்," என்று விஜய் பேசினார்.
திமுகவின் நிறைவேறாத வாக்குறுதிகள் குறித்துக் கேள்வி
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
"சுப்பராயனுக்கு இதே நாமக்கலில் ஒரு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி நம்பர் 456 கொடுத்தது யாரு? சொன்னாங்களே செஞ்சாங்களா?"
"வாக்குறுதி எண் 50 (தானியக் கிடங்குகள்), 66 (நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய்), 68 (நியாய விலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை), 152 (போக்குவரத்து ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம்) - இதையெல்லாம் சொன்னார்களே... செய்தார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
கிட்னி திருட்டு மற்றும் பொய்யான வாக்குறுதிகள்
"நாமக்கல்லில் முட்டை சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை. ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ.வுக்குச் சொந்தமுடைய கிட்னி திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது நாமக்கல்லைச் சேர்ந்த விசைத்தறிப் பெண் தொழிலாளர்கள் எனச் சொல்லப்படுகிறது. இத்திருட்டுக்குக் கந்துவட்டி கொடுமைதான் ஆரம்பப் புள்ளி. அச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தவெக ஆட்சி அமைந்தவுடன் தண்டிக்கப்படுவர். விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தத் தேவையான தீர்வுகளை எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்," என்று விஜய் உறுதியளித்தார்.
திமுகவின் வாக்குறுதிகளைக் குறித்து பேசிய அவர், "புதுசா சொல்லுங்க, புதுசா சொல்லுங்க என்றால், என்னத்த புதுசா சொல்றது? செவ்வாய் கிரகத்தில் ஐ.டி. கம்பெனி கட்டப்படும், காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடிப் பாதை போடப்படும், வீட்டுக்குள் விமானம் இயக்கப்படும் என நம் முதல்வர் போல அடித்துவிடலாமா வாக்குறுதிகளை?" என்று கடுமையாக விமர்சித்தார்.
அடிப்படை சாலை, குடிநீர், பெண்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களைச் சமரசங்களின்றிச் செய்வோம். திமுக போன்று பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்றும் விஜய் உறுதி அளித்தார்.