பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழந்தை நடந்து செல்லும்போது ஒருவன் அந்த குழந்தையை கசக்கி போட்டு உள்ளான். சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் அவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது சிந்தித்தால் எல்லோருக்கும் மிக மிக வேதனையாக இருக்கிறது.
எதையும் கண்டுகொள்ளாத முதலமைச்சர் மக்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள் உறுப்பினராக்குங்கள் பாஜக, அதிமுகவை பற்றி பேசுங்கள் எனக் கூறுவது வேதனை அளிக்கிறது. அந்த வீடியோவை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. இது எதையும் கண்டுகொள்ளாத முதலமைச்சர் 2026 பொதுத் தேர்தலில் 30 சதவீதம் வாக்கு எப்படி பெறுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
திருச்சி சிவா காமராஜரை பற்றி பேசியது குறித்த கேள்விக்கு, “காமராஜரை பற்றி பாஜக பேசியிருந்தால் உடனே ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள். காமராஜர் எல்லோருக்குமான தலைவர். ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை படித்து இருக்கிறது என்றால் அதில் காமராஜரின் பங்கும் உள்ளது. காமராஜரை நாங்கள் காங்கிரஸ்காரராக பார்க்கவில்லை. ஏனென்றால் கடைசி காலத்தில் காமராஜருக்கு மதிப்பளிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான்” என தெரிவித்தார்.
திமுக கூட்டணி குறித்து பேசிய அவர், “திமுக கூட்டணி தற்போது வலுவிழந்த நிலையில் இருக்கிறது. ஏனென்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் கூட்டணியில் உள்ள செல்வ பெருந்தகையும் கார்த்திக் சிதம்பரமும் பேசி உள்ளனர். மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் திமுக உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்களின் வீட்டிற்கே அரசு செல்கிறது என்று திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால் எல்லோரும் ரோட்டுக்கு வந்து விட்டார்கள். ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள் என பலர் ரோட்டுக்கு வந்து போராடுகின்றனர். இதையெல்லாம் விட்டுவிட்டு 2026-ல் 30% வாக்கு வாங்க வேண்டும், அதனால் மக்களிடம் சென்று பேசுங்கள் என்று முதலமைச்சர் சொல்கிறார். எப்படி சொன்னாலும் மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட போவதில்லை” என கூறினார்.