கோவை முதலிபாளையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (நவம்பர் 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜி.எஸ்.டி. குறைப்பால் மக்கள் அடைந்த பலன், அத்துடன் எஸ்.ஐ.ஆர். (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்தும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தீபாவளிக்குப் பிறகு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதன் மூலம் மக்களுக்குப் பலன் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அத்துடன், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்துப் பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு" என்றார்.
தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தி.மு.க. போராட்டம் நடத்துவதை குறித்து பேசிய அவர், "நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நடந்த எஸ்.ஐ.ஆர். தவறாகத் தெரியவில்லையா? 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 முறை எஸ்.ஐ.ஆர். நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பிரச்சினை இல்லையா?
2000-க்கு முன்பு 10 முறையும், அதற்குப் பிறகு 3 முறையும் என மொத்தம் 13 முறை எஸ்.ஐ.ஆர். நடந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இருந்தபோதும் எஸ்.ஐ.ஆர். நடந்திருக்கிறது.
ஒவ்வொன்றாகக் குறை கூறியவர்கள், இப்போது எஸ்.ஐ.ஆர். தவறு எனக் கூறுகிறார்கள். என்ன காரணத்துக்காக இவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆட்சியின் தவறுகளை மறைக்க, மக்களை ஏமாற்ற, மக்களை மடைமாற்றும் முயற்சி இது," என்று அவர் குற்றம் சாட்டினார்.
துணை முதல்வர் உதயநிதி மீது விமர்சனம்
எஸ்.ஐ.ஆர். முறை வேண்டாம் என்றால் போலி வாக்காளர்களை எப்படி நீக்குவது என்று கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன், எஸ்.ஐ.ஆர். குறித்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்தார்.
"எஸ்.ஐ.ஆர். என்றால் என்னவென்றே துணை முதல்வர் உதயநிதிக்கு தெரியவில்லை. Special Intensive Revision-ஐ, Special Intensive Restriction என்று அவர் தவறாகக் கூறுகிறார்," என்று நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
தோல்வி அச்சத்தில் ராகுல் காந்தி
மேலும், தோல்வி குறித்த பயத்தால் ராகுல் காந்தி வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் விமர்சித்தார். "அடுத்து வரும் தேர்தலில் தோல்வி உறுதி எனத் தெரிந்தால், ராகுல் காந்தி வாக்குத் திருட்டு என்கிறார். பா.ஜ.க. வென்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறை; அவர்கள் வென்றால் கிடையாது," என்று அவர் கூறினார்.

LIVE 24 X 7