பாமகவின் உரிமை தொடர்பாக அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. கட்சி மற்றும் அதன் 'மாம்பழம்' சின்னம் யாருக்கு என்பதில் நீடித்து வந்த சட்டப் போராட்டத்திற்கு, தேர்தல் ஆணையத்தின் பதில் மனு இப்போது ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு
முன்னதாக, பாமகவின் முகவரியாக அன்புமணி ராமதாஸின் முகவரியைப் பயன்படுத்திய தேர்தல் ஆணையம், அவருக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பியது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாமக ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் இதில் தேர்தல் ஆணையம் நேரடியாகத் தலையிட முடியாது என்றும், உட்கட்சிப் பூசல்களை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி விளக்கம்
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் சில முக்கியக் காரணங்களை அடுக்கியுள்ளது. அதில், "கட்சியில் பிளவு அல்லது உரிமை கோரல் விவகாரம் எழுவதற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முடிவெடுக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி, 2026-ஆம் ஆண்டு வரை அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் நீடிக்கிறது. அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில், அவரே தற்போதைய தலைவர் என்றும், அதனால் மாம்பழம் சின்னம் மற்றும் கட்சிப் பொறுப்புகள் அவருக்கே சொந்தம் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இறுதி முடிவு
தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தற்போதைய சூழலில் பாமக விவகாரத்தில் கூடுதல் கருத்துகள் எதையும் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறி, இந்த வழக்கையும் நீதிமன்றம் முடித்து வைத்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டாலும், நீதிமன்றத்தின் முடிவாலும் பாமகவின் தலைமைப் பொறுப்பு மற்றும் மாம்பழம் சின்னம் அன்புமணி ராமதாஸிடமே இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

LIVE 24 X 7