தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தனது 'டாா்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவதில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறையும் சிக்கலும்
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவை தேர்தலின் போதே 'டாா்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகக் கூறி ம.நீ.ம. டார்ச் லைட் சின்னத்தைப் பெற்றுள்ளது. ஆனால், தற்போது திமுக கூட்டணியில் இருப்பதால், மநீம-வுக்குக் குறைந்த அளவிலான தொகுதிகளே ஒதுக்கப்படும் சூழல் நிலவுகிறது.
ஒற்றை இலக்கத் தொகுதிகளும் தேர்தல் விதிகளும்
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் எனப் பல கட்சிகள் இருப்பதால், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒற்றை இலக்கத்திலான தொகுதிகளே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இவ்வளவு குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் ஒரு கட்சிக்கு, மாநிலம் தழுவிய பொதுச் சின்னமான 'டாா்ச் லைட்' சின்னத்தை ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முட்டுக்கட்டையாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
திமுக-வின் 'உதயசூரியன்' பிளான்?
சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மநீம வேட்பாளர்களை திமுக-வின் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட வைக்க அறிவாலயம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. ஏற்கனவே கூட்டணியில் உள்ள மதிமுக, கொமதேக போன்ற கட்சிகள் கடந்த காலங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்வைக்கப்படுகிறது. சின்னம் மாறுவது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்கவும், வெற்றி வாய்ப்பை உறுதி செய்யவும் இது உதவும் என திமுக தரப்பு கருதுகிறது.

LIVE 24 X 7