சுப்மன் கில், பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்கள் டெஸ்ட் கேப்டனுகளுக்கான பரிந்துரையில் இருக்கும் நிலையில், இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் குறித்த விவாதத்தில் ரவீந்திர ஜடேஜாவினை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே, டெஸ்ட் போட்டிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறியுள்ள நிலையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் போனது ரசிகர்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், ஏற்கெனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் மற்றும் ரோகித் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தனர்.
நெருங்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி இன்னும் ஒரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு யார் தலைமை தாங்கப்போகிறார் என்கிற கேள்வி தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாகியுள்ளது.
கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் பெயர் அதிகமாக அடிப்பட்டாலும், வெளிநாடுகளில் அவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா ஏற்கெனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள நிலையில் அவரை முழு நேர கேப்டனாக நியமிப்பதில் பிசிசிஜ தயங்குகிறது. அதற்கு காரணம் அவரது உடல்நிலை தான். தற்போது தான் ஆபரேஷன் முடிந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளார் பும்ரா. அவருக்கு மேலும் அதிக வேலைப்பளு, சிரமங்களை தர பிசிசிஐ தயாராக இல்லை என்பதை விட விரும்பவில்லை என தான் கூற வேண்டும்.
ஜடேஜா சரியாக இருப்பார்: அஸ்வின்
இந்நிலையில் தான், 'ஆஷ் கி பாத்' என்கிற தனது யூடியூப் சேனலில் அஸ்வின், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் குறித்த கேள்விக்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ”சுப்மன் கில், பும்ரா, பந்த் ஆகியோரின் திறமையில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. ஆனால், என் விருப்பம் இந்திய அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான ரவீந்திர ஜடேஜாவை, அடுத்த
இரண்டு ஆண்டுகளுக்கு கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
"ஜடேஜா அணியிலேயே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு புதிய வீரருக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்து, பின்னர் அவரை கேப்டனாக்க விரும்பினால், ஜடேஜாவின் தலைமையின் கீழ் அந்த நபரை துணை கேப்டனாக செயல்பட வைக்கலாம். நான் கூறுவது ஒரு வைல்ட் கார்டைப் பயன்படுத்துவது போல் தோன்றும்," என்றும் தெரிவித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3370 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 22 அரைச்சதங்களும் அடங்கும். ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 323 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ? இன்னும் ஒரிரு நாளில் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரை மையமாக வைத்து நடைப்பெற உள்ள போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்க போவது யார் என்பது தெரிந்துவிடும். அதுவரை நாமும் காத்திருப்போம்.