அண்ணா நகரில் காதல் விவகாரம் தொடர்பான மோதலில் நித்தின் சாய் என்ற இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட திமுக பிரமுகர் ( தனசேகரனின் பேரன்) சந்துரு காவல் நிலையத்தில் சரணடைந்தார். சந்துருவை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் ஏற்றி இளைஞர் கொலை
குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்துரு தான் காதல் விவகாரத்தில் வெங்கடேஷ் என்பவருடன் பேசி லொக்கேஷன் அனுப்பி வரவழைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பேரில் தான் வெங்கடேஷ், அபிஷேக், நித்தின் சாய், லலித் உள்ளிட்ட நபர்களுடன் திருமங்கலத்திற்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது சந்துரு காரில் பின்னால் அமர்ந்தபடி, உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விட்டு தொடர்ச்சியாக காரை ஏற்றுவதுபோல செய்ததும், அதன் பின்னர் துரத்தி சென்று இருசக்கர வாகனத்தில் சென்ற சாய் நித்தின் மற்றும் அபிஷேக் மீது மோதியதும், இதில் நிதின் சாய் இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்துருவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தான் தவறு ஏதும் செய்யவில்லை எனவும் காரில் நண்பர்களோடு பயணம் மட்டுமே மேற்கொண்டதாகவும், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்குடன் தான் காரை இயக்கவில்லை எனவும் ஆரோன் தான் காரை இயக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.பயமுறுத்துவதற்காக தான் தாங்கள் காரை இயக்கியதாகவும், எதிர்பாராத விதமாக இடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒருவர் கைது
கொலை செய்ய பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தொடர்ச்சியாக இவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் ஆரோனுடையது என கூறப்பட்டு வரும் நிலையில் அதையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காரை ஓட்டி சென்ற ஆரோன் தற்போது திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எட்வின் என்ற மாணவர் தற்போது வரை தலைமறைவாகி உள்ளார்.அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவனை ஏற்றி கொலை செய்ய பயன்படுத்திய கார் சென்சார் பிரச்சனையால் வளசரவாக்கம் பகுதியில் நிற்கவைக்கப்பட்டுள்ளது. சென்சார் சரி செய்யப்பட்டு மீண்டும் கார் காவல் நிலையத்திற்கு எடுத்து வரும் வரை போலீஸ் பாதுகாப்புடன் அதே பகுதியில் கார் நிற்கவைக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு வாக்குமூலம்
அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஆரோன் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் தான் காரில் கல்லூரிக்கு சென்றுள்ளார். சந்துரு உள்ளிட்டோர் உணவு அருந்த செல்ல திட்டமிட்டு காரை எடுத்து வந்ததாகவும், வெங்கடேஷ் உள்ளிட்டோரோடு பிரச்னை ஏற்பட்ட நிலையில் காரின் கண்ணாடியை உடைத்து விட்டதாகவும், அதனால் ஆத்திரத்தில் விரட்டியபோது சந்துரு அவர்கள் மீது ஏத்து, ஏத்து எனக்கூறியதால் ஆத்திரத்தில் ஏற்றிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.